தனது நண்பர் எம்.ஜி.ஆர் அழைத்தும் அரசியல் கட்சியில் சேராத கவிஞர் வாலி.. காரணமே அந்த பிரபலம் தானாம்..!!

By Priya Ram

Published on:

தமிழ் சினிமாவில் கவிஞர்களான வலி மற்றும் கண்ணதாசன் ஆகியோருக்கு தனி அடையாளம் உள்ளது. இவர்களது பாடல்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. கவிஞர் வாலி, எம்.எஸ் விஸ்வநாதனின் இசையில் எம்.ஜி.ஆர்-க்கும் சிவாஜிக்கும் பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். கவிஞர் வாலி எம்.ஜி.ஆர்-க்கு மிகவும் நெருக்கமானவர்.

   

ஒருமுறை எம்.ஜி.ஆர் தனது கட்சியில் சேர்வதற்கு வாலியை அழைத்துள்ளார். ஆனால் வாலி அந்த அழைப்பை ஏற்று ககொள்ளாமல் இருந்தாராம். அதற்கு முக்கிய காரணம் யார் என்று தெரியுமா? வாலி எம்ஜிஆரின் அழைப்பை ஏற்று அரசியல் கட்சியில் சேராமல் இருந்ததற்கு காரணம் கண்ணதாசன்தானாம்.

ஒரு முறை எம்.எஸ் விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி ஆகியோர் சிங்கப்பூரில் நடக்கும் ஒரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர். அங்கு மாலை நேரம் மூவரும் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தபோது கண்ணதாசன் வாலியிடம் மூன்று கட்டளைகளை பிறப்பித்துள்ளார்.

முதலாவதாக ஒன்று இருக்க மற்றொன்றை நாடாதே, இரண்டாவது சொந்த படம் எடுக்காதே, மூன்றாவது எந்த அரசியல் கட்சியிலும் சேராதே என்பது ஆகும். இதனை தன் வாழ்நாள் முழுக்க வாலி கடைபிடித்துள்ளார். அதனாலேயே எம்ஜிஆரின் அழைப்பை ஏற்றுக் கொள்ள வாலி மறுத்து விட்டதாக நடிகர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

author avatar
Priya Ram