சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படம் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. அதன் பிறகு சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை தனுஷ் தயாரித்திருந்த நிலையில் விஜய் சேதுபதி உடன் நயன்தாரா, பார்த்திபன், ராதிகா மற்றும் ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலமாகத்தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் கதை உருவானது.

இருவரும் அப்போது காதல் வலையில் சிக்கிய நிலையில் சுமார் ஏழு வருடங்களுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவர் குறித்தும் பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தனுஷ் மற்றும் நயன்தாராவின் நானும் ரௌடி தான் பட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விளக்கி கேட்டதாக கூறப்பட்டது.

அதற்கு விக்னேஷ் சிவன் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்க வில்லை, புதுச்சேரி விமான நிலையத்தில் ஷூட்டிங் நடத்த அனுமதி கோரி பாண்டிச்சேரி சென்று இருந்தேன், அப்போதுதான் சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன், என் கூட வந்தவங்க தான் ஹோட்டல் பற்றி விசாரித்தார்கள் என்று விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்திருந்தார். இப்படியான நிலையில் விக்னேஷ் சிவன் குறித்து வலைப்பேச்சு பிஸ்மி பயங்கரமாக விமர்சித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் பேசிய அவர், இத்தனை நாள் கழிச்சு விக்னேஷ் சிவன் தற்போது ஹோட்டல் விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இவ்வளவு பெரிய விவகாரம் சென்று கொண்டிருக்கும்போது முதல் நாளே நீங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்க வேண்டும். அப்போ இந்த இடைப்பட்ட காலத்துல கோமாவுல இருந்தீங்களா. நம்மைப் பற்றி ஏதாவது ஒரு வதந்தி பரவினால் அதற்கு மறுப்பு தெரிவித்து உடனே விளக்கம் கூறுவது தான் நல்லது. ஆனால் விக்னேஷ் சிவன் அதனை செய்யாமல் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி விமர்சனங்கள் அதிகம் எழுந்ததாலும் பலரும் ட்ரோல் செய்து வருவதாலும் அதை கட்டுப்படுத்தவே தற்போது இப்படி ஒரு விளக்கம் அளித்துள்ளார் என்று பிஸ்மி விமர்சித்துள்ளார்.
