சமீபத்தில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற நூலை வெளியிட்ட கவிஞர் வைரமுத்து இப்போது அடுத்ததாக அவர் எழுதிய 1001 பாடல்கள் கொண்ட ஒரு தொகுப்பை வெளியிடுகிறார். இதுகுறித்து வைரமுத்து வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ஆயிரத்தொரு பாடல்கள் தொகுப்புப் பணி தினம் தினம் தீவிரப்படுகிறது. நல்லதொரு செய்தி நண்பர்களே! எழுதி இசையமைக்காத சில பாடல்களும், இசையமைத்து வெளிவராத பல பாடல்களும் இந்தத் தொகுப்பில் அடக்கம் அவற்றுக்குள் இலக்கியமும் இருக்கும்
அஜித் நடித்த ‘பரமசிவன்’ படத்தில் நான் எழுதிக்கொடுத்து இடம்பெறாமல் போன பாடல் ஒன்று இடம்பெறுகிறது. அதைப் பசிக்காகவும் ருசிக்காகவும் பந்தி வைக்கிறேன். “தேசியக் கொடியே வணக்கம் – என் தேசம் உனக்குள் இருக்கும் உன்னில் மூன்று வண்ணங்கள் ஜொலிக்கும் – அது மூன்று பொருள்களைக் குறிக்கும்
இந்து மதத்தின் குறியீடாகும் காவிநிறம் கிறித்துவ மக்களின் அடையாளம்தான்
வெள்ளை நிறம், இஸ்லாமியரின் வண்ணச் சின்னம் பச்சை நிறம். மூவரும் இந்தியர் என்பவன் மட்டும் இந்தியாவிலே இரு – ஒரு மூலையில் புகுந்து கலவரம் செய்தால் இந்தியாவில் நீ எரு” என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.
