Connect with us

CINEMA

“புயல் வீச தொடங்கிட்டா, ஜன்னல் வாய மூடிக்கணும்”.. மறைமுகமாக கங்கை அமரனை தாக்கி வைரமுத்து போட்ட பதிவு..!

கங்கை அமரன் வைரமுத்துவை தாக்கி பேசியதை தொடர்ந்து பதிலுக்கு வைரமுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து பாடலில் இசை பெரியதா? மொழி பெரியதா? என்று பேசியிருந்தார். அது குறித்து விவரித்து இருந்தார். அவர் தெரிவித்திருந்ததாவது இதில் என்ன சந்தேகம், இசை எவ்வளவு பெரியதோ, அதே அளவு பெரியது மொழி.

   

மொழி எவ்வளவு பெரியதோ? அவ்வளவு பெரியது இசை, இரண்டையும் கூட்டினால் தான் பாட்டு என்று பொருள் என்று எடுத்துரைத்தார். சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாகவும், மொழியை விட இசை சிறந்ததாகவும் இருக்கும். இதை புரிந்து கொண்டவர் ஞானி, புரியாதவர் விஞ்ஞானி என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து இளையராஜாவின் சகோதரரும் பாடல் ஆசிரியர் கங்கை அமரன் வைரமுத்துவின் கருத்துக்கு பதில் அளித்து இருந்தார்.

எங்களால் மேலே வந்தவர் வந்த இடத்தை காலில் போட்டு மிதிப்பது போன்று பேட்டி கொடுத்திருக்கிறார். மனிதனுக்கு நன்றி வேண்டும், அவரது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கின்றார் என நேரடியாகவே தாக்கி பேசினார் கங்கை அமரன்.

இந்நிலையில் அவரின் பதிவுக்கு பதில் கூறும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “குயில் கூவ தொடங்கி விட்டால், காடு தன் உரையாடலை நிறுத்திக் கொள்ள வேண்டும். புயல் வீசு தொடங்கி விட்டால், ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும். மக்கள் தானாக பேச தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலை தனித்துக் கொள்ள வேண்டும். அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது” என்று மறைமுகமாக சாடி இருக்கின்றார் வைரமுத்து.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top