கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

By Mahalakshmi on வைகாசி 18, 2024

Spread the love

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது காதலர் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் பவித்ரா ஜெயராம்.

   

தெலுங்கு மொழியில் Trinayani சீரியலில் திலோத்தமா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய புகழைப் பெற்ற இவர் கன்னட சினிமாவிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். ஆந்திர மாநிலம் மெஹபூபா அருகே காரில் சென்று கொண்டிருந்த போது கார் தனது கட்டுப்பாட்டை இழந்ததில் பேருந்து மீது வேகமாக மோதியது.

   

 

இதில் நடிகை பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் பவித்ரா ஜெயராமின் உறவினரான அபிஷா, டிரைவர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் சந்திரகாந்தா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தனர்.

பவித்ராவின் நெருங்கிய நண்பர் நடிகர் சந்திரகாந்த் தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். இவர்கள் இருவரும் ஒரே சீரியலில் நடித்து வருகிறார்கள். பவித்ரா பயணம் செய்த காரில் தான் இவரும் பயணம் செய்தார். இவர் உயிர் தப்பி இருந்த நிலையில் பவித்ரா மட்டும் இறந்துவிட்டார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் விரைவில் இதனை ரசிகர்களுடைய அறிவிக்க இருந்ததாக கூறப்படுகின்றது. இந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டு பவித்ரா உயிரிழந்த நிலையில் துக்கம் தாங்காமல் நடிகர் சந்திரகாந்த் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். இது சின்னத்திரை ரசிகர்களிலேயே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.