அஜித்துக்கு எழுதிய அதே வரியை துல்கர் சல்மானுக்கு எழுதி ஹிட்க்கொடுத்த வைரமுத்து.. இத கவனிச்சிங்களா..?

By Soundarya on கார்த்திகை 19, 2024

Spread the love

தமிழ் சினிமா பாடல்கள் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வருபவர் தான் கவிஞர் வைரமுத்து. சுமார் 7000த்திற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள இவர் நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் என எழுத்துக்காகவே தன்னை ஒப்புக் கொடுத்தவர். அரசு பணி செய்து கொண்டிருந்த இவருக்கு சினிமா ஆர்வம் ஏற்பட்டதை தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான நிழல்கள் திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார்.

#image_title

முதல் பாடலிலேயே வானம் எனக்கொரு போதிமரம் என்ற எழுதி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இளையராஜாவையும் கவர்ந்த இவர் ராஜாவின் கோட்டைக்குள் ஆஸ்தான கவிஞராக மாறினார். இருவரும் இணைந்து புன்னகை மன்னன் மற்றும் சிந்து பைரவி என ஏராளமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர்.

   
   

#image_title

 

வைரமுத்து கிட்டத்தட்ட ஏழு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தொடர்ந்து பல படங்களுக்கு பாடல்களும் எழுதி வருகின்றார். இந்த நிலையில்  அஜித்தின் அமர்க்களம் படத்தில் மேகங்கள் என்னை தொட்டு போவதுண்டு என்ற ஒரு பாடல் எழுதியுள்ளார்.  அதில் பிரிவொன்று நேருமென்று தெரியும் கண்ணே   என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன் என்று எழுதியிருப்பார் வைரமுத்து.

#image_title

இதே வரியை மற்றொரு படத்தின் பாடலில் அபப்டியே பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து. அதாவது துல்கர் சல்மானின் ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற பாடல் தான் தீரா உலா.இதில் இதே வரிகள் சற்று மாற்றி எழுதியுள்ளார் வைரமுத்து. ஆனால் அந்த இரண்டு பாடல்களுமே ஹிட்டான பாடல்கள் தான்.