#image_title
1980 ஆம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் அறிமுகம் ஆனவர் வைரமுத்து. அப்போது இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.
அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.
antha Nilavathan song
ஆனாலும் ரஹ்மானின் வருகைக்குப் பிறகு வைரமுத்து தனது செகண்ட் இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கி இப்போது வரை முன்னணி பாடல் ஆசிரியராக இருக்கிறார். வைரமுத்துவிடம் பல ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றி வந்தார் சினேகன். ஆனால் அவர் ஒரு கவிஞர் என்பதும் பின்னாளில் பாடல் ஆசிரியராக வருவார் என்பதும் அவருக்கேத் தெரியாதாம்.
வைரமுத்துவின் தனித்தன்மையே அவரது கிராமிய மணம் கமழும் வரிகள்தான். அதே போல காமத்தைப் பற்றி எழுதுவதிலும் வைரமுத்து கில்லாடிதான். அப்படி பல பாடல்கள் ரசிக்கத்தக்க வகையில் 18+ விஷயங்களை எழுதியுள்ளார். அதில் சில ரசிக்கத்தக்கதாகவும், சில ஆபாசமாகவும் அமைந்துள்ளன.
Vairamuthu, Ilaiyaraaja and Bharathiraaja
இந்நிலையில் முதல் மரியாதை படத்தில் ‘அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்’ பாடலின் ஒரு இடத்தில் ‘ஓடிவா ஓடப்பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக’ என்று ஆண்குரல் பாடுவது போல இருக்கும். அதற்கு பெண்குரல் “மாசத்துல மூனு நாளு பொறுக்கனும் பொதுவாக” என பாடுவதாக எழுதியிருப்பார். இந்த மாசத்துல மூணு நாள் என்பது பெண்களின் மாதவிடாய் நாட்களைக் குறிப்பது போல உருவாக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த வரிகளுக்குள் சென்சாரில் எதிர்ப்பு வந்ததும் அந்த வரிகளை “அதுக்குள்ள வேண்டாமுங்க ஆளுங்க இருப்பாங்க” என மாற்றியுள்ளனர். ஆனாலும் முதலில் எழுதிய வரிகளே கேசட்களில் இடம்பெற்றுவிட்டதால் இந்த பாடலுக்கு இரண்டு வெர்ஷன்கள் இப்போதும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம் (IBM), தற்போது அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்குத் தகுதியான…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியை முன்னிட்டு ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே ஆபத்தான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின்…
வங்கிகளின் வங்கி என்று போற்றப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI), அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்புவதற்கான…
சென்னை ராயபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ விஜய் தாமு தனது பிறந்தநாளை முன்னிட்டு வாளால் கேக் வெட்டிய…
மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய…
மத்திய அரசின் அடல் பென்சன் திட்டம் (APY) தற்போது இந்தியாவில் மிக முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டமாக உருவெடுத்துள்ளது. 2015…