#image_title
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பாற்றலைக் கொண்டவர் சாவித்ரி. அதனால்தான் அவரை திரையுலகினரும் ரசிகர்களும் நடிகையர் திலகம் என்று அழைத்தனர். ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார்.
புகழின் உச்சத்தில் இருந்தபோது சாவித்ரி, தன்னுடைய சக நடிகரான ஜெமினி கணேசனை அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருந்தபோதும் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஜெமினி கணேசன், சாவித்ரிக்கும் பின்னால் மீண்டும் காதலில் விழுந்ததால் அவரின் பிரிவு நடந்தது.
Mahanati (savithri biopic movie)
இதற்கிடையில் படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் என பலதுறைகளில் சாவித்ரி கால்பதித்தார். ஆனால் நடிப்பு அளவுக்கு அவருக்கு மற்ற துறைகள் கைகொடுக்கவில்லை. அதனால் தனது சொத்துகளை இழந்து கடைசி காலத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தார். சாவித்ரியின் குடிப் பழக்கத்தால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகி இறந்தார். இதனால் சாவித்ரியின் இந்த மரணத்துக்கு ஜெமினி கணேசன்தான் காரணம் என பலரும் இப்போது வரை பேசி வருகிறார்.
இந்நிலையில் சாவித்ரி ஜெமினி கணேசன் ஜோடியின் மகளான விஜய் சாமூண்டீஸ்வரி அவருடைய ஒரு நேர்காணலில் அவரது பெற்றோர் பற்றி பலரும் அறியாத தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “என் அப்பாதான் அம்மாவுக்குக் குடிப்பழக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தார் என சொல்கிறார்கள். ஆனால் அவர் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் என்று பல விஷயங்கள். சினிமாவில் குடிப்பழக்கம் என்பது சாதாரணமானதுதான். அதனால் என் அப்பாதான் அம்மாவைக் கெடுத்தார் என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன்.
VIjaya chamundeeswari (savithri daughter)
என் அப்பாவும் அம்மாவும் பிரிந்தபோது, அப்பா அம்மாவைப் பார்க்க எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் என் அம்மா கூட இருந்த ஜால்ராக்கள்(உறவினர்களை) அவர்களை சந்திக்கவே விடவில்லை. ஒருமுறை அப்பாவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள். அம்மாவின் மன உளைச்சலால் அதிகமாகக் குடித்தும், சாப்பிட்டும் உடல் எடை அதிகமானார். ஆனால் அப்போது கூட இருந்தவர்கள் அதை தடுக்காமல் ‘உன்னை யார் கழுத்துக்குக் கீழே பார்க்கப் போகிறார்கள். உன் முகமே போதும் ரசிகர்களுக்கு’ என்றெல்லாம் அவரைத் தூண்டிவிட்டனர்.” எனப் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பதிலளித்துள்ளார்.…
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.…
தென்னிந்தியத் திரையுலகில் நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு வாழ்வளித்த 'வெற்றித் தயாரிப்பாளர்' ஆர்.பி. சௌத்ரி (76), மே 5 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், காரல் மார்க்ஸ் பிறந்தநாளில் மரியாதை செலுத்திய புரட்சி அதிமுகவின் புகழேந்தி, எடப்பாடி…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுகவின் மூத்த தலைவர் ஓ.எஸ்.…
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…