எவனா இருந்தாலும் தொட்டுப் பாரு, கையை துண்டா வெட்டி வீசிடுவேன்…. வைகோ பரபரப்பு பேச்சு…!

By Nanthini on ஐப்பசி 23, 2025

Spread the love

பல மாநிலங்களில் வெறியாட்டம் போடும் இந்துத்துவ சக்திகள்  தமிழகத்திலும் நுழைந்து விடலாம் என மனப்பால் குடிக்கிறார்கள் என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இன்றைய காலக்கட்டத்தில் தொண்டர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது. ஆனால், அண்ணா காலத்தில் கடிதம் மூலமாகத்தான் தகவல்கள் பரிமாறப்பட்டன. உலக செய்திகளை கூட கடிதமாக அனுப்பியவர் அண்ணா.

இயக்கத்தில் பிளவுகள் ஏற்பட்டபோதிலும், கொள்கை ஒரே மாதிரியானது. பெரியார் சிலையை உடைக்கும் எண்ணம் உள்ளவர்கள் எங்கு எப்போது என்று சொல்லிவிட்டு வாருங்கள் என தெரிவித்த வைகோ, உங்கள் கைதுண்டாக வெட்டப்படும் என கடுமையாக விமர்சித்துள்ளார். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் நிச்சயம் அதை நானே செய்வேன் என்றும் அவர் பேசியுள்ளது பரபரப்பு கிளப்பி உள்ளது.