இது வேற லெவல்… அடுத்த மாநாட்டை அறிவித்த சீமான்… அனல் பறக்கும் தமிழக அரசியல் களம்..!

By Nanthini on ஐப்பசி 23, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்று வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் திருச்சியில் வருகின்ற 2026 பிப்ரவரி 7ஆம் தேதி மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நம் இனத்தின் திருவிழா என்பதால் அனைவரும் கூடுவோம் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை மரங்களின் மாநாடு மற்றும் மலைகளின் மாநாடு, ஆடு மாடுகளின் மாநாடு ஆகியவற்றை நடத்தியுள்ள சீமான் வரும் நவம்பர் 15ஆம் தேதி தண்ணீர் மாநாட்டையும் நடத்த உள்ளார்.