மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் புத்தக வெளியீட்டு விழாவை முன்வைத்து, அக்கட்சியின் முன்னாள் முன்னணி நிர்வாகியான மல்லை சத்யா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள இந்த விழாவில், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் முன்னிலையில் தனது புத்தகத்தை வெளியிட வைகோ திட்டமிட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வின் மூலம் பாஜவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான பாலமாக வைகோ செயல்படுகிறார் என திருச்சியில் பேசிய மல்லை சத்யா சாடியுள்ளார்.
மேலும், கடந்த காலத்தில் ராஜாஜியின் சுதந்திரா கட்சி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனதைப்போல, வைகோவின் காலத்திலேயே மதிமுகவும் முற்றிலுமாக அழிந்துபோகும் என அவர் எச்சரித்துள்ளார். மல்லை சத்யாவின் இந்த அதிரடி விமர்சனம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
