பாரதிராஜா பத்தி சிவாஜி சார் பொலம்புவாரு… உதைக்குற காட்சியில நடந்த சுவாரஸ்ய சம்பவம்- வடிவுக்கரசி பகிர்ந்த தகவல்!

By vinoth on சித்திரை 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வடிவுக்கரசி. படித்துக் கொண்டிருந்த போதே வீட்டுக்குத் தெரியாமல் அந்த படத்தில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். ஆனால் அவரின் வித்தியாசமான மிடுக்கான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. அதன் பின்னர் பல படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இப்போது வரை அசத்தி வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவ்வாறு தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். வடிவுக்கரசி எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்தன. சிவப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை மற்றும் கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் அவரின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

   

அதேபோல வில்லி கதாபாத்திரத்தில் மட்டும்தான் அவர் சிறப்பான நடிப்பைக் கொடுப்பார் என்றில்லாமல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கலக்குவார். ஒரு கட்டத்தில் சினிமாவில் அவருக்குப் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத போது சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். அங்கும் அவருக்கு கொடூர வில்லி கதாபாத்திரமேக் கொடுக்கப்பட்டது. சினிமாவில் தூள் கிளப்பியவர் சீரியலை மட்டும் விட்டு வைப்பாரா என்ன? அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

   

வடிவுக்கரசி சிவாஜி கணேசனின்  ‘முதல் மரியாதை’ படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருப்பார். ஊரில் எல்லோராலும் மதிக்கப்படும் சிவாஜி,வீட்டுக்குள் தன்னுடைய மனைவிக்கு பயந்து ஒடுங்கியவராக, அவரிடம் பேசக் கூட விரும்பாதவராக நடித்திருப்பார். இருவருக்கும் படத்தில் நடிப்புப் போரே நடந்திருக்கும்.

 

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வடிவுக்கரசி “முதல் மரியாதை ஷூட்டிங்கில் முதலில் சிவாஜி சாருக்கு பாரதிராஜா சார் ஸ்டைலே புரியவில்லை. ‘நடிக்க வைக்குறேன்னு கூப்டு வந்து நடக்க வைக்குறான்” என புலம்புவார். என்னை உதைப்பது போன்ற காட்சியில் என் மேல் கால் கூட படாமல் நடித்தார். எப்படி நடிக்கப் போகிறேன் என என்னிடம் விளக்கமாக சொல்லிவிட்டுதான் நடித்தார். ஆனால் அவர் கால் படாமல் நானாக கீழே விழுவதுதான் கஷ்டமாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.