Connect with us

ஒரு கதாபாத்திரத்துக்காக சண்டையிட்ட வடிவுக்கரசி… கோபத்தில் பாரதிராஜா செய்த செயல்…

CINEMA

ஒரு கதாபாத்திரத்துக்காக சண்டையிட்ட வடிவுக்கரசி… கோபத்தில் பாரதிராஜா செய்த செயல்…

வடிவுக்கரசி தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகை, குணச்சித்திர மற்றும் வில்லி நடிகை ஆவார். இவர் 1978 ஆம் ஆண்டு சிகப்பு ரோஜாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். திரைப்பட இயக்குனர் ஏபி நாகராஜன் இவரது தாய் மாமா என்பது குறிப்பிடத்தக்கது.

   

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தமாக 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தமிழில் 40க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் வடிவுக்கரசி. வடிவுக்கரசி கதாநாயகியாக நடித்த திரைப்படம் கன்னிப்பருவத்திலே. இத்திரைப்படத்தில் நடிகர் ராஜேஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுக்கு தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் வடிவுக்கரசி. பெரும்பாலான எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாகவே பிரபலமானவர் வடிவுக்கரசி.

   

இதற்கிடையில் வடிவுக்கரசி ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காக பாரதிராஜாவிடமே சண்டை போட்டுள்ளார். அது என்னவென்றால் 1993 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கி விஜயகுமார், நெப்போலியன் ராதிகா நடித்த திரைப்படம் கிழக்கு சீமையிலே. இந்த திரைப்படத்தில் முதலில் விஜயகுமாருக்கு ஜோடியாக நடிப்பதற்கு வடிவுக்கரசியை அழைத்தார்களாம்.

 

வடிவுக்கரசியும் நடிக்க ஒப்புக்கொண்டு எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு ஷூட்டிங்கிற்கு வந்தாராம். ஆனால் பாரதிராஜா அவர்கள் கதையை கொஞ்சம் திருத்தி எழுதியுள்ளார். கிழக்கு சீமையிலே திரைப்படம் அண்ணன் தங்கை பாசத்திற்கான திரைப்படம் என்பதால் அண்ணனுக்கு துணைவி இல்லாமல் அவர் தனியாக இருந்தால் அந்த கதாபாத்திரத்திற்கு வெயிடேஜும் சென்டிமென்ட்டும் அனுதாபமும் அதிகமாக இருக்கும் என்று கருதிய பாரதிராஜா அவருக்கு துணைவியார் வேண்டாம் என்று அந்த கதாபாத்திரத்தை நீக்கிவிட்டார்.

இதை அறிந்த வடிவுக்கரசி மிகவும் கடுமையாக பாரதிராஜாவிடம் சண்டையிட்டுள்ளார். நீங்கள் எப்படி கதாபாத்திரத்தை எடுக்கலாம் என்னை வர சொல்லிட்டு எப்படி நீங்க வேண்டாம்னு சொல்லலாம் அப்படின்னு கதியிருக்கிறார். பின்னர் அந்த நேரத்தில் விஜயகுமாருக்கு பெரும்பாலான திரைப்படங்களில் ஜோடியாக நடிப்பவர் விஜயகுமார் அவர்களின் மனைவி மஞ்சுளா விஜயகுமார். அதனால் வடிவுக்கரசி தவறாக நினைத்துக் கொண்டு எங்க என்னுடைய கதாபாத்திரத்தை தூக்கி விட்டு எனக்கு பதில் வேற யாரையாவது நடிக்கணும்னு திட்டம் போட்டுட்டீங்களா என்று பாரதிராஜாவிடம் சண்டை இட்டுள்ளார் வடிவுக்கரசி.

உடனே கோபமடைந்த பாரதிராஜா அதெல்லாம் ஒன்னும் இல்ல இந்த கதைக்கு இந்த கதாபாத்திரம் வேண்டாம்னு நினைச்சேன் அதனாலதான் நான் அந்த கதாபாத்திரத்தை தூக்கிட்டேன். இந்த இடத்துல நான் வேற யாரையுமே நான் நடிக்க வைக்கல விஜயகுமார் தனியா தான் நடிக்கிறார். அப்படி நீ தப்பா நினைக்கிற மாதிரி நான் வேற ஏதாவது ஒரு கதாநாயகியை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வச்சுட்டேன்னா என்ன செருப்பால அடி அப்படின்னு ஒரு வார்த்தையால பதில் சொல்லி கோபத்தோடு சென்று இருக்கிறார் பாரதிராஜா. வடிவுக்கரசி பின்பு ஒன்றுமே கூறாமல் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பி சென்று விட்டாராம் .

More in CINEMA

To Top