CINEMA
ரஜினியிடம் வசமாக மாட்டிக்கொண்ட குஷ்பூ… காப்பாற்றிய பிரபு…
1980 கள் 90களில் மிகவும் புகழ்பெற்ற பிரபலமான முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பூ. 1980ல் குழந்தை நட்சத்திரமாக தன் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய குஷ்பூ 1988 ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாது கன்னடம் மலையாளம் போன்ற பிறமொழிப் பழங்களிலும் நடித்தவர் குஷ்பூ.
ஒரு நடிகைக்கு கோவில் கட்டி இருக்கிறார்கள் என்பது என்றால் அது குஷ்பு அவர்களுக்கு தான். அத்தனை கோடி ரசிகர்களை தனது நடிப்பினால் ஈர்த்தவர் குஷ்பூ. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரோடும் நடித்துள்ளார் குஷ்பூ. சின்னதம்பி, ரிக்ஷா மாமா, மைக்கேல் மதன காமராஜன், பாண்டியன், அண்ணாமலை, மன்னன், சிங்காரவேலன், புருஷ லட்சணம், நாட்டாமை, சின்ன வாத்தியார், முறைமாமன், மின்சாரக் கண்ணா, சுயம்வரம், மலபார் போலீஸ் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் குஷ்பூ.
பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்ட குஷ்பூ தொலைக்காட்சி தொடர்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தனது கணவர் சுந்தர் இயக்கும் படங்களை தயாரித்தும் வருகிறார் குஷ்பூ.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் நுழைந்த பொழுதில் தமிழ் மொழி தெரியாமல் குஷ்பூவுக்கு என்னவெல்லாம் நடந்தது என்பதை பற்றி ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். அது என்னவென்றால் குஷ்பூ தமிழில் நடித்து முதன் முதலாக வெளியான திரைப்படம் தர்மத்தின் தலைவன். அப்போது குஷ்பூக்கு தமிழே தெரியாதாம். அந்த நேரத்தில் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக இருந்து வந்துள்ளார். ஷூட்டிங்கின் போது செட்டில் இருப்பவர்கள் குஷ்புவிற்கு தமிழை தப்பு தப்பாக கற்றுக் கொடுத்து விட்டார்களாம். அதாவது குட் மார்னிங் என்றால் தமிழில் வாடா எனவும் குட் ஈவினிங் என்றால் தமிழில் போடா எனவும் சொல்லிக் கொடுத்து விட்டனராம்.
தர்மத்தின் தலைவன் சூட்டிங் ஸ்பாடிற்கு ரஜினிகாந்த் வந்ததும் அனைவரும் எழுந்து நிற்க குஷ்பூ மற்றும் வாடா என்று சொல்லிவிட்டாராம். உடனே அங்கு இருந்த பிரபு ஓடிப்போய் குஷ்பூவை தடுத்து நீ என்ன சொல்லிட்டு இருக்க தெரியுதா ஏன் இப்படி சொல்ற அப்படின்னு பிரபு கேட்டிருக்கிறார். அப்ப நான் அவருக்கு வந்து குட்மார்னிங் தான சொன்ன தமிழ்ல அப்படித்தானே வரும் அப்படித்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க அப்படின்னு சொன்னாராம். உடனே பிரபு இல்ல நீ சொன்னதுக்கு அர்த்தமே வேற அப்படின்னு சொல்லி புரிய வச்சாராம் அது தெரிஞ்ச உடனே குஷ்பு ரொம்ப அதிர்ச்சி அடைஞ்சுட்டாங்களாம். ஆனால் ரஜினி அதை ஒரு பொருட்டாக எடுக்காமல் செட்டில் சொல்லி சிரிச்சாரம்.