Connect with us

விஜய் சேதுபதி முதல் சிவகார்த்திகேயன் வரை.. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்த வடிவேலுவின் டயலாக்ஸ்..!!

CINEMA

விஜய் சேதுபதி முதல் சிவகார்த்திகேயன் வரை.. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்த வடிவேலுவின் டயலாக்ஸ்..!!

பிரபல நடிகரான வடிவேலுவின் காமெடிக்கு சிரிக்காத ஆள் இருக்கவே முடியாது. ஒவ்வொரு படத்திலும் வைகைபுயல் வடிவேலு பேசிய காமெடி வசனங்கள் சூப்பர் ஹிட் ஆகும். இன்றுவரை பல மீம் கிரியேட்டர்களுக்கு வடிவேலு காமெடி தான் பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் வடிவேலு பேசிய வசனங்கள் பல திரைப்படங்களின் தலைப்புகளாக மாறி இருக்கிறது. அந்த படங்களை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

நானும் ரவுடிதான்:

   

வடிவேலு தலைநகரம் திரைப்படத்தில் போலீஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டு நான் ஜெயிலுக்கு போகிறேன். நானும் ரவுடிதான் என்ற வசனத்தை பேசினார். அந்த வசனம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 2015-ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அந்த டயலாக் எப்படி சூப்பர் ஹிட் ஆனதோ அதே போல நானும் ரவுடிதான் படமும் சூப்பர் ஹிட் ஆனது.

   

 

ஜில் ஜங் ஜக்:
கடந்த 1994-ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் காதலன் திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தில் பெண்களை வர்ணிக்கும் விதமாக வடிவேலு ஜில் ஜங் ஜக் என்ற வசனத்தை பேசினார். கடந்த 2012-ஆம் ஆண்டு தீரஜ் வைத்தி இயக்கத்தில் சித்தார்த் நடித்த டார்க் காமெடி படத்திற்கு ஜில் ஜங் ஜக் என்ற தலைப்பு வைக்கப்பட்டது.

த்ரிஷா இல்லனா நயன்தாரா:
தலைநகரம் திரைப்படத்தில் வடிவேலு பேசிய வசனங்களை யாராலும் மறக்கவே முடியாது. அந்த திரைப்படத்தில் திரிஷா இல்லனா திவ்யா என்ற வசனத்தை வடிவிலும் பேசினார். அந்த வசனத்தைப் போலவே கடந்த 2015-ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் ரிலீசான படத்திற்கு திரிஷா இல்லனா நயன்தாரா என பெயர் வைக்கப்பட்டது.

பிளான் பண்ணி பண்ணனும்:
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் போக்கிரி இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் வடிவேலு கெட்டப் முதல் வசனங்கள் வரை அனைத்தும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதில் பிளான் பண்ணி பண்ணனும் என வடிவேலு பேசிய வசனம் சூப்பர் ஹிட் ஆனது. அந்த டயலாக்கை வைத்து பத்ரி வெங்கடேஷ் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரியோ ராஜ் ஹீரோவாக நடித்தார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்:
சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த் நடித்த வின்னர் படம் சூப்பர் ஹிட் ஆனது. அந்த திரைப்படத்தில் வடிவேலு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவராக நடித்திருப்பார். அந்த பேரிலேயே பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தை எடுத்தார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

நாய் சேகர்:
தலைநகரம் திரைப்படத்தில் வடிவேலுவின் கேரக்டர் பெயர் நாய் சேகர். அதன் பெயரிலேயே சதீஷை ஹீரோவாக வைத்து நாய் சேகர், வடிவேலுவை ஹீரோவாக வைத்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்று இரண்டு படங்கள் எடுக்கப்பட்டது.

#image_title

author avatar
Priya Ram

More in CINEMA

To Top