Categories: சினிமா

வடிவேலுவை திரையுலகம் புறக்கணித்ததா…? கலைஞர் 100 விழாவில் வடிவேலுவை ‘அவன் எல்லாம் ஒரு ஆளு”.. ஒருமையில் பேசி பிரபலம்..

Spread the love

நகைச்சுவை வடிவேலுவை பற்றிய விஷயங்கள் தான் தற்போது சமூக வலைதளத்திலும், கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நபரில் ஒருவராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவுக்கு கொடிகட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்த மவுசு தற்போது குறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவருடன் நடித்த பலரும் அவரை பற்றின பல எதிர்மறையான கருத்துகளை கூறி வந்த நிலையில், விஜயகாந்த் மறைவிற்கு அவர் செல்லாதது மேலும் அவர் மீதான நன் மதிப்பை கெடுத்துள்ளது.

#image_title

ஒட்டு மொத்த திரையுலகமே விஜயகாந்த் இறப்பிற்கு சென்ற நிலையில், வெளிநாட்டில் இருந்த நடிகர்கள் சென்னை திரும்பிய பிறகு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால் அவரால் சினிமாவில் வளர்த்து விடப்பட்ட வடிவேலு ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்பதால், அவர் மீது பலரும் தங்களது வருத்தங்களையும், கோபத்தையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே சேர்ந்து கொண்டாடியது. ஆனால் ரஜினி, கமல் இவர்களைத் தவிர சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நடிகர்கள், நடிகைகள் யாரும் வராதது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

#image_title

இந்நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். இவ்விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றி கிளம்பியதை தொடர்ந்து ரஜினி, கமல் ஆகியோரும் உரையாற்றி விட்டு ஒருவர் பின் ஒருவராக கிளம்பினர். அதன் பிறகு வடிவேலு மேடையில் பேசிவிட்டு கிளம்ப அவருக்காக பேட்டரி கார் தயார் நிலையில் இருந்ததாம். ஆனால் அவர் வருவதற்கு முன் டிரம்ஸ் சிவமணி தன் குடும்பத்தாருடன் அந்த பேட்டரி காரில் ஏறி உட்கார அங்கு இருந்தவர்கள் இது வடிவேலுவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

#image_title

அதற்கு டிரம்ஸ் சிவமணி ஆமா, அவன்லாம் ஒரு ஆளு எனக் கூறியதோடு காத்திருந்து வரட்டும் எனக் கூறியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வடிவேலுவுடன் வந்திருந்தவர்கள் டிரம்ஸ் சிவமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்ததாக ஒரு கார் வர, அதில் வடிவேலு அமர, பார்த்திபனும் அதில் அமர, அடுத்தக் காரில் வருமாறு வடிவேலுவை நிர்பந்திக்க, பின் வந்த காரில் ஏறி சென்றாராம் வடிவேலு. இது வடிவேலுவுக்கு தேவை தான் என விஜயகாந்தின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Archana

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

4 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

5 மணத்தியாலங்கள் ago