பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான் என்று மக்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓட்டிங் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் அர்ச்சனா. தற்போது பிக் பாஸ் அர்ச்சனாவின் பல தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இதில் குறிப்பாக அவரின் 10 மற்றும் 12 மார்க் லிஸ்ட் போட்டோவும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்த வாரம் பைனல் செலிப்ரேஷன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷனில் வெளியே சென்ற போட்டியாளர்கள் மறுபடியும் வீட்டிற்குள் வந்து நடக்கவிருக்கும் டாஸ்க்கில் கலந்து கொள்வது வழக்கம். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
அர்ச்சனாவின் தந்தை ஒரு தமிழ் பேராசிரியர் என்பதால், சிறு வயதிலிருந்தே தமிழ் மீது அர்ச்சனாவிற்கு மிகுந்த ஆர்வமும், ஈர்ப்பும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும் அர்ச்சனாவின் அப்பா சொல்லிக் கொடுத்தே வளர்த்தார். நன்றாக படிக்கும் அர்ச்சனா 10 ம் வகுப்பில், 500 மதிப்பெண்க்கு, தமிழில் 97 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும், அறிவியலில் 97 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 98 மதிப்பெண்களும் பெற்று மொத்தம் 491 மதிப்பெண்களை பெற்று இருக்கிறார்.
அதைப்போல, 12 ம் வகுப்பில் அறிவியல் குரூப் எடுத்து, இதில் தமிழில் 185 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 177 மதிப்பெண்களும், இயற்பியலில் 146 மதிப்பெண்களும், வேதியலில் 155 மதிப்பெண்களும், தாவரவியலில் 156 மதிப்பெண்களும் மற்றும் கணிதவியலில் 156 மதிப்பெண்களும் பெற்று மொத்தம் 1200க்கு 1005 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவரின் மார்க் லிஸ்ட் போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
அர்ச்சனா நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் முதலில் ஆதித்யா தொலைக்காட்சியில் ஆர்ஜே வாக அறிமுகமானார். அதன் பின்பு நடிகர் கலையரசனின் மனைவி ஜவுளி கடைக்கு சென்றபோது நடிகர் கலையரசனிடம் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார். அந்த போட்டோ மூலமாகத்தான் சின்ன திரையில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியலின் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின் திரையுலக வாய்ப்பிற்காக காத்திருந்த அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வேர்ல்ட் கார்டு என்ட்ரி வழியாக உள்ளே நுழைந்தார். தற்போது பைனல் லிஸ்ட் இடத்தில் முதல் போட்டியாளராக இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனா அர்ச்சனா தான் டைடில் வின்னராக இருக்கிறார்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…