Connect with us

CINEMA

‘நல்லா நடிச்சா பாராட்டுவாரு.. ஆனா, அந்த சீன படத்துல இருந்து தூக்கிடுவாரு’.. வடிவேலுவின் இன்னொரு முகம் பற்றி ஓப்பனாக பேசிய ஆர்த்தி..

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சியவர் வடிவேலு. மற்ற நகைச்சுவை நடிகர்களுக்கும் வடிவேலுவுக்கும் இடையே உள்ள வித்தியாசமே அவரின் உடல் மொழிதான். அதனால் இன்றும் அவர் சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஆனால் அந்த தேர்தலில் திமுக கூட்டணி தோற்றதால், அதன் பிறகு அவரைப் படங்களில் நடிக்கவைக்க தயாரிப்பாளர்கள் தயங்கினர்.

   

அந்த தேர்தலில் வடிவேலு தனது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது தேமுதிக தலைவர் விஜயகாந்தோடு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது மிகவும் அநாகரிகமான முறையில் விஜயகாந்தை குடிகாரர் போல மட்டமாக சித்தரித்து பேசினார் வடிவேலு.  அதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக படத்தில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார்.

இதனால் வடிவேலுவை நம்பி அவர் குழுவில் இருந்த துணை நகைச்சுவை நடிகர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். அந்த காலத்தில் வடிவேலு தங்களை கைவிட்டு விட்டார் என்றும் தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் பலரும் நேர்காணல் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடிவேலுவோடு கிரி உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்தவர் ஆர்த்தி கணேஷ். அவர் தற்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் வடிவேலு சக நடிகர்கள் மேல் பொறாமைபட்டு அவர்களின் காட்சிகளை நீக்கிவிடுவார் எனக் கூறியுள்ளார். அவரது நேர்காணலில் “வடிவேலு சார் சிறப்பான நடிகர். அவரோடு நடிக்கும் போது நாம் நல்லா நடிச்சோம்னா ‘சூப்பர் செல்லம். பின்னிட்ட செல்லம்’ என புகழ்ந்து தள்ளுவார்.

ஆனா நாம நல்லா நடிச்ச ஷாட்ட தூக்கிடுவாரு. அதுபத்தி நாம கேட்டா ‘அது நல்லா வரல செல்லம். விடுங்க அடுத்த படத்துல பின்னிடுவோம்’ என நைசாக பேசி நம்மளை சமாதானப்படுத்தி விடுவார்” எனக் கூறியுள்ளார்.

author avatar
Continue Reading

More in CINEMA

To Top