பிரமாண்டமாக தயாராகும் CHIYAAN62.. இணையும் 3 PAN இந்திய நடிகர்கள்.. வேற லெவல் கூட்டணியா இருக்கே..

By Ranjith Kumar on பிப்ரவரி 16, 2024

Spread the love

சித்தார்த்தை வைத்து இயக்கிய வெற்றியைக் கண்டு தமிழ் திரையுலகையே திருப்பி பார்க்க வைத்த சித்தா படத்தின் இயக்குனர் எஸ்.யு அருண்குமார் அவர்கள் இயக்கத்தில் விக்ரமை வைத்து விக்ரம் 62 என்ற படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார் தற்போது சில மாதங்களுக்கு முன்னால் இப்படத்தின் சில வீடியோ காட்சிகளை கிளிப்பிங்சாக வெளியிட்டு இருந்தார்கள்.

அருண்குமார் அவர்கள் இதற்கு முன் சேதுபதி சிந்துபாத் பண்ணையாரும் பத்மினியும் என்ற என்ற படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு பரிசளித்திருந்தார் சித்தாவின் வெற்றிக்கு பின் இவர் விக்ரமுடன் கூட்டணியாக இணைந்துள்ளார், நடிப்பின் நாயகன் விக்ரம் அவர்கள் தாகம் அடங்காத நடிப்பும் அருண்குமாரின் சித்தாந்தமான இயக்கமும் சேர்வது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்து வருகிறது, பெருமளவில் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் இவர்களின் கூட்டணியை கண்டு.

   

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்களான் படம் மாபெரும் பொருட்ச் செலவில் படம் தயாரிப்பு நடந்து வருகிறது, இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது, இன்னும் மீதி வேலைகளை இருக்கிறது, திரைக்கு விரைவில் வரும் என்று பா ரஞ்சித் அறிவித்து இருந்தார். அதற்குப்பின் விக்ரம் அவர்கள் அருண்குமார் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் வில்லனாக நடிப்பின் அரகன் எஸ் ஜே சூர்யா அவர்கள் இணைந்துள்ளார்,

   

மலையாள நடிப்பின் நாயகன் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக இணைந்துள்ளார், அதுமட்டுமின்றி தெலுங்கில் ஒரு வில்லனை தேடி வருவதாகவும், அவர் பைரவா போன்ற பல படங்களில் வில்லனாக நடித்த ஜெகபதிபாபு என்று சில தகவல்கள் வெளியாகி வருகிறது, இன்னும் இப்படத்தின் முழுமையான தகவல்கள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் அருண்குமார் அவர்கள் இதை கூடிய விரைவில் தெரிவிப்பார் என்று அறிவித்திருக்கிறார், இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விரைவாக நடந்து கொண்டு வருகிறது இப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று மிக ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் விக்ரமின் ரசிகர்கள்.