துள்ளாத மனமும் துள்ளும் வடிவேலுக்காக எழுதிய கதையா?.. பல வருட கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்..!

By Nanthini on ஆனி 12, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தன்னுடைய ஆரம்ப காலங்களில் காதல் பின்னணி கொண்ட ஃபீல் குட் திரைப்படங்களில் தான் அதிகம் நடித்து வந்தார். பூவே உனக்காக மற்றும் காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் வரிசையில் அவருக்கு சூப்பர் ஹிட் ஆக அமைந்தது தான் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம். சில்வர் ஜூப்ளி கொண்டாடிய இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் இல்லை என்ற ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணியின் நடிகர்களில் நடிகர் விஜய்க்கு முக்கிய இடம் உள்ளது. நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர்தான் விஜய்.

சில்வர் ஜூப்ளி காணும்.. "துள்ளாத மனமும் துள்ளும்".. அதுல முதல்ல நடிக்கவிருந்தது யார் தெரியுமா? - Thentamil

   

ஆரம்ப காலங்களில் தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் நடித்து வந்த இவருக்கு பூவே உனக்காக திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து லவ் டுடே, நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை மற்றும் நினைத்தேன் வந்தாய் போன்ற திரைப்படங்கள் இவரை டாப் இடத்திற்கு கொண்டு சென்றது. இந்த வரிசையில் 1999 ஆம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய்க்கு மேலும் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. முக்கியமாக கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் உருவானது இந்த படத்தில் தான். எழில் இயக்கிய இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

   

வடிவேலுவுக்குப் பதில் விஜய்... ஆனால், நிறைய மாத்தினோம்!" - எழில் #22YearsOfThulladhaManamumThullum | Article about 19 Years Of Thulladha Manamum Thullum - Vikatan

 

 

மேலும் மணிவண்ணன் மற்றும் தாமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி தயாரித்த இந்த படம் 200 நாட்கள் வரை வெற்றிகரமாக ஓடியது. ஆனால் இப்படத்தில் வடிவேலு தான் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்ததாக ஒரு செய்தி இணையத்தில் வைரலாக பரவியது.. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் எழில், இப்படத்தின் கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொன்னேன்.

துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு முதலில் வடிவேலு தான் ஹீரோ... அப்போ விஜய் எப்படி.? | Vadivelu was originally slated to play the hero in Vijay's Thullatha Manamum Thullum - Tamil ...

ஆனால் ஹீரோயினிக்கு கண் தெரியாத எனக் கூறியதும் பலரும் பின்வாங்கி விட்டனர். ஆனால் இது வடிவேலு சாருக்காக எழுதின ஸ்கிரிப்ட் கிடையாது. ஒருவேளை அவர் இந்த படத்தில் நடிக்கிற மாதிரி இருந்திருந்தால் அவர் இதில் பெயிண்டர் ஆக இருந்திருப்பார். நிறைய காமெடி இருந்திருக்கும். இந்த கதையை என்னுடைய நண்பர்களிடம் கூறிய போது நல்லா இருக்க கதையை எதுக்கு அப்படி பண்ணனும் கொஞ்சம் கமர்சியலா பண்ணா நல்லா இருக்கும் என்று சொன்னாங்க. சரி என்று நானும் கொஞ்சம் ஸ்கிரிப்ட் மாத்திட்டேன். அதன் பிறகு தான் ஆர் பி சவுத்ரி படத்தின் கதையை ஓகே பண்ணி விஜய் அதில் நடிக்க வச்சாரு என்று எழில் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.