அது எதுவுமே உண்மை இல்லை.. ஒரே போடாய் போட்ட ஆல்யா மானசா.. இப்படி ஏமாத்திட்டீங்களேமா..!

By Nanthini on ஆனி 12, 2025

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சீரியல் நடிகை ஆல்யா மானசா. சன் டிவியில் ஒளிபரப்பான இனிய தொடர் மூலம் இனியாவாக மக்களை கவர்ந்து விட்டார். இந்தத் தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது வரை எந்த தொலைக்காட்சியிலும் நடிக்க கமிட்டாகவில்லை. இதனிடையே இவர் சமீபத்தில் தான் தன்னுடைய பிறந்தநாளை பிரம்மாண்டமான முறையில் குடும்பத்துடன் கொண்டாடினார்.

சொகுசு கப்பல் காரில் பிறந்த நாளை கொண்டாடிய ஆல்யா மானசா..! சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..! - TamilWire

   

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது 550 கோடி ரூபாயில் வீடு பற்றியும் விலை உயர்ந்த கார் வாங்கியது குறித்தும் செய்தி வெளியானது பற்றி சில தகவல்களை இவர் பகிர்ந்துள்ளார். அதில், நான் என்னுடைய முப்பதாவது பிறந்த நாள் கொண்டாடினேன். அதனை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் என் பிறந்தநாள் கொண்டாடிய காரை நாங்கள் வாங்கவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு வாடகைக்கு தான் எடுத்திருந்தோம்.

   

Serial Actress Alya Manasa Buys 2 crore worth Boat House in Kerala : சொந்தமாக சொகுசு கப்பல் வாங்கிய ஆல்யா மானசா; அதன் மதிப்பு இத்தனை கோடியா? | Serial Actress Alya Manasa Buys 2 Crore Worth

 

ஹவுஸ் போட் நாங்கள் வாங்கியது கிடையாது. அது மணிமேகலையை வைத்து செய்த பிராங்க் வீடியோ தான். மேலும் 550 கோடியில் ஒரு வீடு வாங்கினியே அது என்னாச்சு என்று சிலர் கேட்டாங்க. கேட்கும்போது எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு. அதன் பிறகு மக்கள் அதை நம்பி சின்ன குடும்பத்திலிருந்து வந்த நீங்க 550 கோடி வீடு வாங்கிட்டீங்களே என்று வாழ்த்துக்கள் சொன்னாங்க. அதற்கு நான், ஆமா நீங்க பாத்தீங்கன்னு தான் சொல்ல தோணும் என்று ஆலியா மானசா எதுவுமே உண்மை இல்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.