தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் சில வரிகளையும் பாடினார். இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் போன்ற இரு ஜாம்பவான்கள் இருந்த போதும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக நடித்திருந்தார்.
இதையடுத்து சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசனோடு நடிக்கும் போது அவரின் உடல்மொழி பிடித்துப் போய் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தில் வாய்ப்பளித்தார். தேவர் மகன் படம் வடிவேலுவுக்கு ஒரு நல்ல பிரேக்காக அமைந்தாலும், இயக்குனர் வி சேகரின் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த ‘வரவு எட்டணா செலவு பத்தனா’, காலம் மாறி போச்சு, நான் பெற்ற மகனே போன்ற படங்கள்தான் அவரை காமெடியில் உச்சம் தொட வைத்தன.
அதன் பிறகு கவுண்டமணி செந்திலும் மார்க்கெட்டும் டவுன் ஆக வடிவேலுவின் கொடி உயரப் பறந்தது. போட்டிக்கு விவேக் இருந்தாலும் அவரால் வடிவேலு அளவுக்கு உச்சம் தொட முடியவில்லை என்பதுதான் உண்மை. வடிவேலுவின் மார்க்கெட் உயர உயர அவரின் அராஜகமும் அதிகமானது. அவர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பல வழிகளில் டார்ச்சர் கொடுத்துள்ளார். அதை அவருடன் பணியாற்றிய சகக் கலைஞர்களே பகிர்ந்துள்ளனர்.

#image_title
அப்படி ஒரு சம்பவத்தை சுந்தரா டிராவல்ஸ் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் பகிர்ந்துள்ளார். அதில் ” சுந்தரா டிராவல்ஸ் ஷூட்டிங்கின் போது முரளியும் வடிவேலுவும் தண்ணி போட்டுட்டு வந்து ஒழுங்கா நடிக்காம பயங்கர லூட்டி அடிச்சாங்க. நான் படத்தையே கைவிட்டுவிடலாம்னு நெனச்சேன். அப்ப நடிகர் சங்கத் தலைவரா இருந்த விஜய்காந்த் சார்கிட்ட சொன்னேன். அவர் உடனே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து ‘தொலச்சுபுடுவேன்” இருவரையும் மிரட்டினார். அதுக்கப்புறம்தான் அவங்க ஒழுங்கா நடிச்சுக் கொடுத்தாங்க.
ஆனாலும் மீண்டும் ஒருநாள் ஷூட்டிங் வராமல் வடிவேலு தொல்லைக் கொடுத்தார். ஏன் என்று கேட்டால் ‘நீ மீசைய எடுத்தாதான் நான் நடிக்க வருவேன்’ எனக் கூறினார். நானும் மீசையை எடுத்தேன். ஆனாலும் பொறுக்க முடியாமல் நடுராத்திரி 12 மணிக்கு விஜயகாந்த் சாருக்கு போன் செய்தேன். அவர் உடனே கிளம்பி வந்து பிரச்சனையை சரிசெய்தார்” எனக் கூறியுள்ளார்.
