அஜித்துக்குக் குழந்தை இல்லாததைப் பற்றி தப்பாக எழுதிய பத்திரிக்கையாளர்… அஜித் பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?

By vinoth on கார்த்திகை 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றுள்ள வசூல் மன்னன்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் அஜித். அமராவதியில் ஆரம்பித்த அவரின் திரைப் பயணம் இன்று விடாமுயற்சியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. முதலில் காதல் படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் தீனா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார்.

90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். இடையில் அவர் சில் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். தன்னோடு இணைந்து நடித்த நடிகை ஹீராவை அவர் காதலித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சேர்ந்து சுத்துவதாகவும் கிசுகிசுக்கள் அப்போது பரவின. இதை இருவருமே மறுக்கவில்லை.

   

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் பிரிந்தது. இதனால் சில ஆண்டுகள் அஜித் சினிமாவில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்தார். அப்போது அமர்க்களம் நடித்த போது ஷாலினி மீது அஜித் காதல் வசப்பட்டு அவரிடம் ப்ரபோஸ் செய்தார். ஷாலினியும் அவர் குடும்பமும் சம்மதித்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்.

   

#image_title

 

அஜித் ஷாலினி தம்பதிகளுக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகள் குழந்தை இல்லை. இது குறித்து பல்வேறு வதந்திகள் சில மஞ்சள் பத்திரிக்கைகளில் வெளிவந்தன. அது குறித்து ஒரு சம்பவத்தை பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் பகிர்ந்துள்ளார்.

அதில் “ஒரு சினிமா பத்திரிக்கையில் அஜித்துக்குக் குழந்தை இல்லாதது குறித்து எல்லாம் தப்பாக எழுதினார்கள். அஜித்துக்கு ஆண்மை இல்லை என்றெல்லாம் எழுதி சர்ச்சையைக் கூட்டினர். அப்படி எழுதியவர் நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு இரண்டரை லட்ச ரூபாய் பண உதவி செய்தார் அஜித். அது குறித்து அவரின் மேனேஜரேக் கேட்டபோது  ‘இந்த நேரத்துல நாம பழிவாங்கக் கூடாது. அவர் நல்லா இருக்கும்போது சண்டை போடலாம். நம்ம ஈகோவ காட்டுறதுக்கான நேரம் இது இல்ல.’ என சொன்னார்.” எனத் தெரிவித்துள்ளார்.