தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்த காமெடி நடிகர் வடிவேலு. இவரின் நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களின் எப்போதும் இவரது பெயர்தான். ஒரு ட்ரோல் செய்தால் கூட அதில் கட்டாயம் வடிவேலு பெயர் இடம் பெற்று இருக்கும். சமூக வலைத்தளங்களின் நெட்டிசனல் பலரும் இவரை வைத்து தான் ட்ரோல் செய்கின்றனர்.
அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர். நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்த நிலையில் அதே சமயம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சந்திரமுகி 2 திரைப்படத்திலும் இவர் நடித்து இருந்தார்.
வடிவேல் அவர்களுக்கு மீண்டும் கம்பேக் கொடுத்த பிறகு எந்த படமும் சரியான சரியாக அமையாமல் இருந்த நிலையில், மாமன்னன் பெரும் வரவேற்பை மக்களிடையே கிடைத்தது. அந்த வரிசையில் மாமன்னன் படத்திற்கு பின்பாக வடிவேலு அவர்களுக்கு மாமன்னன் போல் கதைகளும் கதாபாத்திரம்தான் வந்து அமைகிறது. கதை சொல்ல வரும் இயக்குனர் அனைவரும் அழுது கொண்டே கதை சொல்லும் அளவிற்கு மிக தாக்கமான படங்களாக தனக்கு வருவது என்றும், காமெடி கலந்த எந்த படமும் வரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே 2001 ஆம் ஆண்டு நாராயணமூர்த்தி அவர்கள் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு, விவேக் காம்போவில் காமெடியில் கலக்கிய “மனதை திருடி விட்டாள்” படத்தை போல், தற்போது பிரபுதேவா அவர்கள் வடிவேலை வைத்து மீண்டும் படம் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜா என்ற புதுமுகம் இயக்குனரை வைத்து பிரபுதேவா மற்றும் வடிவேலு நடிப்பில் “life is beautiful” என்ற தலைப்பிட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறதாம். இப்படம் மனதை திருடி விட்டால் படம் போல் எடுக்க வேண்டும் என்று பிரபுதேவா முழுமூச்சாக இறங்கி வேலை பார்க்கிறாராம். ஆனால் சில காலங்களுக்கு முன்னால் விவேக் தவறியதால் இப்படத்தில் அவர் இணையாமல் இருப்பது பெரும் சோகமாகும்.