சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

வேட்டையன் படத்தில் அமிதாபச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், பகத் பாசில் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ஆந்திராவில் நடைபெற்றது. தற்போது 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அனேகமாக ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வேட்டையன் படம் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பட குழுவினர் வெளியிட்ட போஸ்டரும் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

