குட் நியூஸ்..!  மத்திய கட்டட ஆராய்ச்சி மையத்தில் காலிப்பணியிடங்கள்.. ME, MTech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!

By Soundarya on மார்கழி 10, 2025

Spread the love
சி.எஸ்.ஐ.ஆர் (CSIR) அமைப்பின் கீழ் சென்னையில் செயல்படும் மத்திய கட்டட ஆராய்ச்சி மையத்தில் (CSIR-SERC) காலியாக உள்ள 30 விஞ்ஞானி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள்: விஞ்ஞானி (Scientist) – 30 காலியிடங்கள்

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எம்.இ. (M.E) அல்லது எம்.டெக் (M.Tech) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பணி அனுபவமும் அவசியம்.

வயது வரம்பு: 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

   

விண்ணப்பக் கட்டணம்:

   

பொதுப் பிரிவினருக்கு ரூ.500.

 

பெண்கள், எஸ்.சி (SC), எஸ்.டி (ST) பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசி நாள்: 22.12.2025

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், விரிவான தகவல்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம் https://devapps.ngri.res.in/SercSci2025/.