“குஷியோ குஷி” PF சந்தாதாரர்களுக்கு ஜனவரி முதல் வட்டி உயர்வு..? மத்திய அரசு அதிரடி…!!

By Soundarya on மார்கழி 10, 2025

Spread the love
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கிற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது EPF திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2% ஆக உள்ளது. இந்த வட்டி விகிதத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 8.7% வரை உயர்த்த அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த உயர்வு அமலுக்கு வந்தால், ஊழியர்களுக்குக் கிடைக்கும் வட்டித் தொகை கணிசமாக அதிகரிக்கும்.
உதாரணமாக EPF கணக்கில் ரூ. 5 லட்சம் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு சுமார் ரூ. 42,000 வட்டியும், ரூ. 6 லட்சம் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு சுமார் ரூ. 50,000 வட்டியும் கிடைக்க வாய்ப்புள்ளது.
உங்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள, உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து ‘EPFOHO UAN’ என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் (SMS) அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு EPFO அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.