CINEMA
பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கவிடும் வாழை.. 2-வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 23-ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் வாழை திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக வாழை திரைப்படத்திலிருந்து பாடல்கள் ரிலீஸ் ஆகி மக்கள் மனதை வென்றது. அதிலிருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. வாழை திரைப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாழை திரைப்படத்தை பார்த்து இயக்குனர் பாலா, சூரி ஆகியோர் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மாரி செல்வராஜுக்கு முத்தம் கொடுத்து தங்களது பாராட்டை தெரிவித்து சென்றனர்.
இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. அதிலும் முக்கியமாக இயக்குனர் பாரதிராஜா வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு மிகவும் பெருமையாக இருக்கிறது என பாராட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் இருக்கும் சாரி செல்வராஜின் வீட்டிற்கு சென்று அவரை பாராட்டியுள்ளார். ஆரம்பத்தில் இருந்து படத்தின் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது.
இந்த நிலையில் ரிலீசான முதல் நாளில் வாலை திரைப்படம் 1.15 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளான நேற்று வாழை திரைப்படம் 2.40 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. ஆக மொத்தம் இரண்டு நாட்களில் 3.55 கோடி ரூபாய் வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புகிறது. இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.