CINEMA
எவ்ளோ தைரியம்..? சிவாஜி படத்தை பார்த்துட்டு கலைஞர் சொன்ன வார்த்தை.. உண்மையை போட்டுடைத்த ரஜினிகாந்த்..!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு சிவாஜி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சங்கர் இயக்கினார். சிவாஜி படத்தை ஏவிஎம் புரோடக்ஷன் தயாரித்தது. இந்த படத்தில் மணிவண்ணன், விவேக், ஸ்ரேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிவாஜி படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதி பற்றி தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ வேலு கலைஞர் என்னும் தாய் என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் நூலை வெளியிட முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, நான் நடித்த சிவாஜி படம் அரசியல்வாதிகளை சாடி ஊழல் பற்றி பேசி எடுக்கப்பட்ட படம் அந்த படத்தின் கதை தெரிந்தும் கலைஞர் அவர்கள் வந்து பார்த்தார்கள். சிவாஜி பணத்தைப் பார்த்த வைரமுத்து ஊழல் சம்பந்தமான படத்தை எடுத்துக்கொண்டு அதை முதலமைச்சர் அருகிலேயே உட்கார்ந்து பார்க்கிறீர்களே.
உங்களுக்கு நிறைய தைரியம் இருக்கு என கூறினார். கலைஞர் படத்தை பார்த்துவிட்டு நமக்கு இதெல்லாம் ஒழிக்கணும் நல்லது செய்யணும்னு ஆசை என பெருமூச்சு விட்டார். அந்த மூச்சில் பல ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது. அதே மாதிரி வெற்றி விழாவில் கலந்து கொண்டு எல்லாரையும் புகழ்ந்து, கேடயம் கொடுத்து சந்தோஷப்பட்டாரு என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.