Categories: சினிமா

ஷங்கர் படத்துல பாட்டு நல்லா வருதுன்னா அதுக்குக் காரணம் இதுதான்… வாலி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.

திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார். அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் எம் ஜி ஆர் வாலியை தன்னுடைய ஆஸ்தான கவியாக மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் பல நடிகர்களுக்கு எழுதிய வாலி, கடைசியாக சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

வாலி எழுதினார் என்றால் அந்த பாடல் கமர்ஷியல் ஹிட் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. அதனால்தான் முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்கள் படங்களில் வாலி, ஒரு பாடலாவது எழுத வேண்டும் என ஆசைப்படுவார்கள். அப்படிதான் இயக்குனர் ஷங்கர், தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாலியை தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்தார்.

ஷங்கருடனான கூட்டணி குறித்து பேசியுள்ள வாலி, “ஷங்கர் படத்தில் ஏன் பாடல்கள் நன்றாக வருகிறது என்றால், அவர் நல்ல வரிகள் வருவதற்காகக் காத்திருப்பார். என்னைப் போட்டு டார்ச்சர் செய்யமாட்டார். இந்தியன் படத்தில் மாயா மச்சிந்திரா பாடலுக்கு செட் எல்லாம் போட்டு ஷூட்டிங் போக தயாராக இருந்தார்கள். ஆனால் இன்னும் வார்த்தை வந்துவிழவில்லை.

அவர் என்னை அவசரப்படுத்தவில்லை. 3 நாட்கள் ஷூட்டிங்கை தள்ளிவைத்துவிட்டு காத்திருந்தார். அதன் பிறகுதான் எனக்கு மாயா மச்சிந்திரா என்ற வார்த்தைகள் கிடைத்தன. அந்த பாடலை வித்தியாசமாகப் படமாக்கி பெரியளவில் ஹிட்டாக்கினார்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

5 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago