வாலி, நாகேஷ், மனோரமா இவர்கள் மூவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை.. இதுவரை பலரும் அறியாத தகவல்..!

By Nanthini on கார்த்திகை 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 50 களில் தொடங்கி இன்றுவரை நடிகர் நடிகைகளாக பலரும் ஜொலித்துக் கொண்டு இருக்கின்றனர். அதனைப் போலவே தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என ஏராளமானோர் பயணிக்கின்றனர். அதில் ஒரு சிலருக்கு மட்டுமே சினிமா பின்னணி இருக்கும். பல தங்களுடைய கடின உழைப்பால் தான் இன்று சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் திரை பிரபலங்கள் பலருக்கு சில ஒற்றுமைகள் இருக்கலாம். அதன்படி கவிஞர் வாலி, மனோரமா மற்றும் நாகேஷ் ஆகிய மூவருக்கும் ஒரே ஒற்றுமை உள்ளது. இதனை வாலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

வாலி – OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

   

கவிஞர் வாலி:

   

அதாவது தமிழ் திரையுலகில் நான்கு தலைமுறைகளுக்கு பாட்டு எழுதியவர் தான் கவிஞர் வாலி. இவர் பாட்டு எழுதியதோடு சிறுகதை, கதை மற்றும் நடிப்பு என பல்துறை வித்தவராகத்தான் திகழ்ந்தார். இவர் திரைத்துறையில் சுமார் 15,000 பாடல்களை எழுதியுள்ளார். சுமார் 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படி சினிமாவில் உச்சத்தில் இருந்த பாலி திரைத்துறையில் முதன்முதலாக அறிமுகமானது 1958 ஆம் ஆண்டு என அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 

மனோரமா நினைவலைகள்: 5 முதல்வர்களுடன் நடித்த தமிழ் சினிமாவின் 'ஆச்சி' குறித்த  சுவாரஸ்ய தகவல்கள் - BBC News தமிழ்

மனோரமா:

அதனைப் போலவே தமிழ் சினிமாவில் சிறப்புமிக்க பழம்பெரும் நடிகையாக இருந்தவர்தான் மனோரமா. தமிழ் திரையுலகில் தமிழ் திரைப்பட ரசிகர்களால் நடிகை மனோரமா அவர்கள் ஆட்சி என்று அன்போடு அழைக்கப்பட்டார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்தி இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இப்படி ரசிகர்களால் ஆட்சி என்று அன்போடு கொண்டாடப்பட்ட மனோரமா திரைத்துறையில் 1958 ஆம் ஆண்டு தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஒரே ஒரு வரி வசனம்; ஒன்றரை மாதம் ஒத்திகை: நாகேஷ் நடிப்புக்கு பரிசு கொடுத்த  எம்.ஜி.ஆர்

நாகேஷ்:

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் நாகேஷ். அவருடைய அலட்டிக் கொள்ளாத முக பாவங்களும் ஆபாசம் இல்லாத காமெடி வரிகளும் உடல் அசைவுகளும் அவரை ரசிகர்கள் மத்தியில் இன்றும் நிலைத்து நிற்க வைத்துள்ளது. இவர் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகர் மற்றும் வில்லனாகவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நாகேஷ் திரைத் துறையில் அறிமுகமானது 1958 ஆம் ஆண்டு தான்.

இந்த தகவலை தான் கவிஞர் வாலி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதாவது நானும், மனோரமா மற்றும் நாகேஷ் மூவரும் திரை துறையில் அறிமுகமானது 1958 ஆம் ஆண்டு தான். அந்த வருடத்தில் ஏதோ ஒன்று உள்ளது என்று ஒரு பேட்டியில் கூறி இருப்பார்.