12 ஆண்டுகளாக பிச்சை எடுத்த பெண்… கையில் இருந்த பையை பிடுங்கிய கிராம மக்கள்… திறந்து பார்த்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி… வைரலாகும் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

உத்தரகாண்ட் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுமார் 12 வருடங்களுக்கு மேலாக வீடுகளுக்கு வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார். சமீபத்தில் அந்த பகுதி மக்கள் அவரை அங்கிருந்து அகற்ற முயற்சி செய்தபோது அவர் வைத்திருந்த இரண்டு பைகளில் பெரிய அளவில் பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் நோட்டுகள், காசுகளாக இருந்த பெருமளவு பணம் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதிகாலையில் தொடங்கிய பண எண்ணிக்கை மாலை வரை தொடர்ந்து உள்ளது. ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் மேல் எண்ணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பணத்தை பாதுகாப்பாக கைப்பற்றினர். மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாதாரணமாக ஒரு பிச்சைக்காரி என்று கருதப்பட்ட பெண் இத்தனை வருடங்களில் இவ்வளவு பணம் சேமித்து வைத்திருப்பது மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் உணர்ச்சிகரமான கேள்விகளை தூண்டுகிறது.