வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களின் பாதுகாப்பு என்பது இன்றும் கேள்விக்குறியாக தான் உள்ளது. சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் தான் சவுதியில் நடந்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித தளமான சவுதி அரேபியாவில் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒட்டகங்கள் நிறைந்த பாலைவன பின்புலத்தில் போஜ்புரி மொழியில் பேசிய அந்த நபர், “நான் அலகாபாத் கிராமத்தை சேர்ந்தவன், சவுதிக்கு வந்தேன். கபில் தான் என்னுடைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துள்ளார். ஊருக்கு திரும்பி செல்ல வேண்டும் என கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். தயவுசெய்து என்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று கதறியபடி பிரதமரிடம் உதவி கேட்டு அந்த நபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதராக உடனடியாக பதிவுக்கு பதில் அளித்துள்ள நிலையில் அந்த நபரின் இருப்பிடத்தை அறிய முயற்சி நடந்து வருவதாகவும் வீடியோவில் அவர் இருக்கும் இடம் சரியாக தெரியாததால் விரைந்து நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களுக்கு தாய்நாடு விரைவான உதவி அளிக்க முன்வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வரும் நிலையில் இந்திய தூதரகம் விரைந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
माननीय विदेश मंत्री @DrSJaishankar जी तत्काल संज्ञान मे ले, प्रयागराज हंडिया प्रतापपुर का रहने वाला फंसा सऊदी अरब मे…
पार्ट 1 सभी भाई बहन इस वीडियो को शेयर करें ताकि इसकी सहायता हो पाए 🙏 pic.twitter.com/5op97otITq
— कल्पना श्रीवास्तव 🇮🇳 (@Lawyer_Kalpana) October 23, 2025
