“கையில் 2 மாத குழந்தை…” ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும்போது தடுமாறிய உஷா வான்ஸ்… உதவிக்கு வராத காவலர்கள்…. விவாதத்தை கிளப்பிய வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 7, 2026

Spread the love

அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ், மேரிலாந்தில் உள்ள ‘ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ்’ தளத்தில் ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கும்போது எதிர்பாராதவிதமாகப் படிக்கட்டில் தடுமாறினார். அந்தச் சமயத்தில் அவர் தனது 9 வாரக் குழந்தையான அலெக் நீல் வான்ஸைக் கையில் வைத்திருந்தார்.

இருப்பினும், சாமர்த்தியமாக கைப்பிடியைப் பிடித்து கொண்டதால் அவருக்கும் குழந்தைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவருக்குப் பின்னால் வந்த ஜே.டி. வான்ஸ், தனது 4 வயது மகளுடன் இறங்கி வந்தார். அருகில் இருந்த பாதுகாப்புப் படையினர் உதவி செய்ய முன்வராதது குறித்து இணையத்தில் கேள்விகள் எழுந்துள்ளன. அலாஸ்காவிற்குப் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.