மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் ஹஜிரா பகுதியில் உள்ள ஒரு துரித உணவுக் கடையில், 18 வயது இளைஞர் ஒருவர் 20 ரூபாய்க்கு மோமோஸ் வாங்கியுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட மோமோக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக அவர் கடைக்காரரிடம் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மூண்டது. இந்த சண்டையில் ஆத்திரமடைந்த அந்த வியாபாரி, அங்கிருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து மாணவர் மீது கொடூரமாக வீசியுள்ளார்.
இந்த எதிர்பாராத தாக்குதலின் காரணமாக, அந்த மாணவரின் முகம் மற்றும் காதுப் பகுதிகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. கொடூர செயலில் ஈடுபட்ட அந்த வியாபாரி சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உள்ளூர் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
