“இதை தொட்டால் சீனா காலி” அடுத்ததாக முக்கிய இடத்தை குறிவைக்கும் டிரம்ப்… விழிப்புடன் இருக்கும் இந்திய கடற்படை..!!

Spread the love

உலக அளவில் 25 சதவீத வர்த்தகமும், 35 சதவீத எண்ணெய் போக்குவரத்தும் நடைபெறும் மிக முக்கிய நீர்ச்சந்தியான மலாக்கா நீரிணையை (Strait of Malacca) அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டு வருவது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம், அந்த நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்மூலம் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளின் 80 சதவீத எண்ணெய் விநியோகப் பாதையான மலாக்கா நீரிணையை அமெரிக்காவால் எளிதாகக் கண்காணிக்க முடியும்.

இந்த நீரிணை இந்தியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியாகவும் மிக முக்கியமானது. இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 55 சதவீதம் இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. எரிபொருள் மட்டுமல்லாது மின்னணு சாதனங்கள், உற்பத்திப் பொருட்கள் எனப் பலவும் இதன் மூலமே பரிமாறப்படுகின்றன. இதனால் மலாக்கா நீரிணையில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் இந்திய வர்த்தகத்தைப் பெருமளவில் பாதிக்கும் என்பதால், இந்தியா இந்தப் பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

அமெரிக்காவின் இந்த நகர்வுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்தப் பிராந்தியத்தில் இந்தியா தனது கடல்சார் வலிமையை அதிகரித்து வருகிறது. அந்தமான் நிக்கோபாரில் உள்ள ‘ஐஎன்எஸ் பாஸ்’ விமான நிலையம் மற்றும் கிரேட் நிக்கோபார் திட்டம் ஆகியவற்றின் மூலம் மலாக்கா நீரிணையை இந்தியா தனது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வைத்துள்ளது. எதிர்காலத்தில் சீனாவுடனான மோதல் போக்கு அதிகரித்தால், அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இந்த மலாக்கா நீரிணை ஒரு மிகச்சிறந்த வியூகப் புள்ளியாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Soundarya

Recent Posts

“தெருவில் காட்டிய வித்தை” ஒரே ஒரு வீடியோ… சிறுவனின் வாழ்க்கையை மாற்றப் போகும் ஆனந்த் மகிந்திராவின் ஒற்றை ட்வீட்..!!

உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…

7 minutes ago

“அந்தமான் கடலுக்கு அடியில் கிடைத்த ‘புதையல்’!.. இந்தியாவுக்கு அடித்த பிரம்மாண்ட அதிர்ஷ்டம்.. அலறும் உலக நாடுகள்.. வெளியான மாஸ் வீடியோ”..!!

இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…

22 minutes ago

FLASH: திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பதவியில் இருந்து விலகல்.. உதயநிதிக்கு பலத்த அடி..!!

திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…

34 minutes ago

“சுற்றி இருக்கும் 10 பேர் கொண்ட கும்பல் உருவாக்கிய மாயை” – திமுகவை அதிரடியாக வெளுத்து வாங்கிய தவெக அமைச்சர்…!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…

40 minutes ago

“‘யாருக்கு அனுமதி கொடுத்தீங்க?’.. துறவிகள் வேடத்தில் வந்து இளம் தம்பதியை துரத்தி துரத்தி அடித்த கும்பல்.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யான் பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நபர்கள் கும்பலால் இளம்…

42 minutes ago