“அவ்வளவு தான் சோலி முடிந்தது”…. ஈரான் மீது கொடூர தாக்குதல்.. அதிகாலை நேரத்தில் டிரம்ப் பகிர்ந்த வீடியோ… ஆடிப்போன உலக நாடுகள்…!

Spread the love

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது அமெரிக்கா மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் உயர் மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வளைகுடா பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் ராணுவ நிலைகளைக் குறிவைத்துத் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தற்போது நடத்தப்பட்டுள்ள இந்த நள்ளிரவுத் தாக்குதல், ஈரானின் அதிகார மையத்தைச் சிதைக்கும் நோக்கில் அமைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ள அதிபர் டிரம்ப், தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானை தவறாக வழிநடத்திய பல முக்கிய ராணுவத் தலைவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விமானங்களின் இரைச்சல் மற்றும் பயங்கர வெடிச்சத்தங்கள் நிறைந்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். ஈரானின் மின்சார உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்தி வைப்பதற்கான காலக்கெடு நாளை (ஏப்ரல் 6) முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே இந்தத் துல்லியமான தாக்குதலை அமெரிக்கா அரங்கேற்றியுள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதிகள் யார்? மற்றும் எத்தனை பேர் உயிரிழந்தனர்? என்பது குறித்த விரிவான பட்டியலை வெள்ளை மாளிகை இன்னும் வெளியிடவில்லை. அதேபோல் ஈரான் தரப்பிலிருந்தும் உயர்மட்டத் தலைவர்களின் மரணம் குறித்துப் நேரடியான உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை வரவில்லை. ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளான ஆர்தேஷ் கூட்டுப் படைத் தலைமையகம் மற்றும் பி1 பாலம் ஆகியவை சமீபத்தில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதைய இந்தத் தாக்குதல் ஈரானின் ராணுவப் பலத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த மோதல் போக்கு, சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எரிசக்தி விநியோகப் பாதுகாப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்த அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருவதால், இந்தப் போர்ச் சூழல் விரைவில் முடிவுக்கு வரும் அறிகுறி தென்படவில்லை. இந்தத் தொடர் மோதல்களால் வளைகுடா நாடுகள் முழுவதும் கடும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளன.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago