முன்னணி நடிகையான ஊர்வசி ரவுடேலா தமிழில் தொழிலதிபரான லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்த லெஜன்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ரந்தீப் ஹூடா, அமித் சியால், அபிமன்யுசிங் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இன்ஸ்பெக்டர் அவினாஷ் என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஊர்வசி நடித்திருந்தார்.

இந்த படம் கடந்த மே மாதம் ஜியோ ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் அக்டோபர் 14-ஆம் தேதி அன்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 12-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை பார்க்க ஊர்வசி ரவுடேலா சென்றிருந்தார். அந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்திய அணி வெற்றி பெற்றது.
View this post on Instagram
இந்நிலையில் டிக்கெட் போட்டியை பார்க்க சென்ற ஊர்வசி ரவுடேலா தனது 24 கேரட் தங்க ஐபோனை தொலைத்து விட்டார். இதுகுறித்து ஊர்வசி ரவுடேலா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எனது 24 கேரட் தங்க ஐபோனை தொலைத்து விட்டேன். யாராவது கண்டெடுத்தால் என்னை தொடர்பு கொள்ளவும் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அகமதாபாத் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

