மூன்று முடிச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுஅஃமானவர் தான் நடிகை ஊர்வசி. 1980 மற்றும் 90-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் ஊர்வசி. தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். ஊர்வசி பிரபல கதாநாயகியாக வலம் வந்தபோது மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. இவர்களுக்கு தேஜ லட்சுமி.
தேஜ லட்சுமி இப்போது சினிமாவில் நடிக்க வருகிறார். பெங்களூரில் படித்து அங்கே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த லட்சுமிக்கு சினிமாவியல் நடிகையாக வேண்டும் என்பது தான் கனவாம். அதனால் இப்போது நடிக்க வந்துள்ளார். தன் அம்மா ஊர்வசியுடன் அவர் கொடுத்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, எனக்கு நடிக்க வேண்டும் என்பது தான் சிறுவயதில் இருந்தே ஆசை, அம்மா தான் அப்போது அனுமதிக்கவில்லை. நான் பெங்களூரில் வேலை பார்த்தபோது எனக்கு சினிமா மீது இருந்த ஆசை போகவில்லை என்பதை உணர்ந்தேன். அதுனால் வேலையை விட்டு விட்டு நடிக்க வந்துட்டேன். எனக்கு கங்குபாய் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என ஆசை, அந்த மாதிரி சேலஞ்சிங்கான கதாபாத்திரங்கள் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.