என்னடா டிரஸ் இது..? 9 கிரகங்களை தனது ட்ரஸுக்குள் கொண்டுவந்த பிரபல நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

By Deepika

Updated on:

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதை நோக்கமாக வைத்துள்ளார். இவரது அளவுக்கு மீறிய கவர்ச்சியால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு.

Urfi javed different look

இவரை முழுசான உடை அணிந்து யாரும் பார்த்து இருக்கவே முடியாது. வித்தியாசமாக எதையோ செய்கிறேன் என்று, தர்பூசணி போல் உடையணிவது, மலர்களை போல் உடையணிவது என இஷ்டத்திற்கு அலப்பறை கொடுத்து வருகிறார். இவர் என்னத்தான் கன்றாவியாக டிரஸ் போட்டாலும், இணையத்தில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அம்மணியும் இதை தொடர்ந்து செய்து வருகிறார்.

   

அண்மையில் இவர், ஆபாசமாக உடை அணிந்து நடுரோட்டில் சுற்றியதாக மும்பை போலீஸார் கைது செய்ததாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது. இந்த வீடியோ குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் விளம்பரத்துக்காக இதுபோன்ற கைது நாடகத்தை உர்ஃபி ஜாவேத் செய்தார் என தெரியவந்ததை அடுத்து, அம்மணி மீது, மும்பை ஓஷிவாரா போலீஸார் 171, 419, 500, 34 ஐபிசி பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர். இதைப்பற்றி கவலைப்படாத உர்ஃபி, வழக்கு எல்லாம் எனக்கு தூசி என தன் இஷ்டத்திற்கு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது, இவர் வித்தியாசமான உடையில் வருகிறேன் என்று, சூரிய கிரகத்தை இடுப்பில் சுத்தவிட்டுள்ளார். அதாவது தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்,வடிவேலு ஒரு படத்தில் இடுப்பில் கூடையை கட்டிக்கொண்டு வருவாரே அது போல, கறுப்பு நிற உடையில், இடுப்பில், கண்ணாடி குடுவையை கட்டிக்கொண்டு, அதற்குகள் சூர்யா கிரகத்தை வைத்துள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால், லைட் போட்டது அந்த சூர்ய கிரகணம் சுற்றுவதுதான். இதைப்பார்த்த கடுப்பான ரசிகர்கள் இதையெல்லாம் பார்ப்பது எங்க தலையெழுத்து என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

author avatar
Deepika