தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். டியூட் மற்றும் எல்ஐகே படங்களுக்குப் பிறகு நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படம் குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் டைரக்ட் செய்து அவரே கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார். இதுகுறித்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியதாவது, பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அந்த படத்தை நாங்கள் தயாரிக்க உள்ளோம். 2026ம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கி அதே ஆண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் கதையில் பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது என்று அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
