மணமகனான பகவான் கிருஷ்ணன்… சிலையுடன் பெண்ணுக்கு நடந்த திருமணம்… உ.பி.யில் நடந்த வினோத சம்பவம்…!

By Nanthini on மார்கழி 10, 2025

Spread the love

இப்போதெல்லாம் சில மனிதர்கள் அடிக்கடி வினோதமான செயல்களில் ஈடுபடுவது என்பது வாடிக்கையாக்கிவிட்டது. திருமண விஷயத்தில் இப்படிப்பட்ட வினோத முயற்சியில் ஈடுபடுபவர்கள் பற்றி செய்திகள் அடிக்கடி வெளியாகி கொண்டிருக்கின்றன. அதாவது ஆன்லைனில் திருமணம், பொம்மையுடன் திருமணம், தான் வளர்க்கும் நாய்க்குட்டியுடன் திருமணம், தன்னைத் தானே திருமணம் என உலகம் முழுவதும் பல சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இதையெல்லாம் தாண்டி தற்போது ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் தான் அந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேசத்தில் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன்னிலையில் அவருடைய சிலையையே பிங்கி (28) என்ற பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். அண்மையில் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்ற போது சிலை மீது தங்க மோதிரம் விழுந்ததாகவும் காய்ச்சல் வந்த போது கிருஷ்ணருக்கு பூஜை செய்ததும் குணமானதாகவும் அந்த பெண் கூறுகின்றார்.

   

இந்த சம்பவங்கள் கிருஷ்ணர் சொன்ன அறிகுறிகள் என நம்பிய அந்தப் பெண் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாகவும் கூறியுள்ளார். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது