வீட்டுல படுக்க கூட இடமில்லே… ரொம்ப கஷ்டப்படறோம் – அரசு ஒரு வீடு கட்டித் தருமா? கோரிக்கை விடுத்த கேரம் சாம்பியன் வீரா் கீர்த்தனா!

By Elango on மார்கழி 10, 2025

Spread the love

மாலத்தீவு நாட்டில் தலைவர் மாலேவில் நடந்த 7வது உலகக் கோப்பை கேரம் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனா மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர் என்ற பிரிவிலும் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார். டீம் பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்துள்ளார். கீர்த்தனா மொத்தம் 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் சென்னை திரும்பிய கீர்த்தனா செய்தியாளர்களிடம் கூறியதாவது, எனது அம்மா ரொம்பவும் கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார்கள். நகை எல்லாம் அடகு வைத்து கேரம் போட்டியில் விளையாட எனக்கு பணம் கொடுத்துள்ளார்.

ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் அம்மா என்னை இந்த நிலைக்கு வர உருவாக்கினார். எங்கள் வீட்டில் எல்லோருமே கஷ்டப்படுகிறோம். எங்கள் வீட்டில் படுக்க கூட இடம் இருக்காது. இப்போது நான் பெற்று வந்த வெற்றி கோப்பையை கூட வீட்டில் வைக்க இடம் இருக்காது. அதனால் நான் போட்டியில் வாங்கிய பாதி வெற்றிக்கோப்பைகள் கேரம் கிளப்பில் தான் இருக்கும். எங்கள் வீட்டில் அதை வைக்ககூட இடவசதி இல்லை. எனவே எனக்கு வேலையும் சொந்தமாக வீடு கட்டவும் உதவுமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கேரம் சாம்பியன் கீர்த்தனா கூறியிருக்கிறார்.