சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த இந்த விசித்திரமான சம்பவம் தான் வீடியோவாக வைரல் ஆகி வருகிறது. உத்திரபிரதேசத்தில் ஒரு இளைஞர் தன்னுடைய பைக்கில் ஒரே நேரத்தில் ஆறு சிறுவர்களை ஏற்றுக்கொண்டு செல்கின்றார். அதில் நான்கு பேர் பைக்கின் பின்புறமும் இரண்டு பேர் முன்புறமும் அமர்ந்திருக்கின்றன. சாலையில் பாதுகாப்பை புறக்கணிக்கும் இந்த செயலைக் கண்டு போலீசார் சில நொடிகள் திகைத்து நின்றனர். அந்த இளநரை நிறுத்திய போலீசார் முதலில் அவருக்கு கை கொடுத்து வாகனத்தை நிறுத்த உதவி செய்தார்.
பிறகு சாலை விதிகளை மீறியதற்காக 7,000 அபராதம் விதித்தனர். போக்குவரத்து காவலர் மரியாதையுடன் நடந்து கொண்ட இந்த செயல் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஒருபுறம் போலீசாரின் அன்பான உதவி மறுபக்கம் சாலை விதிகளை மீறியதற்கான தண்டனை என்ற இந்த இருமுகமான செயல் பலருடைய பாராட்டையும் பெற்றுள்ளது. அதேசமயம் இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாகவும் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் நினைவூட்டி உள்ளது.
