நவம்பர் 10ஆம் தேதி அதிகாலை புதன் துலாம் ராசிக்கு பின்னோக்கி செல்லும். அதற்கு அடுத்த நாள் குரு கடக ராசிக்கு பின்னோக்கி செல்லும். இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நேரத்தில் பிற்போக்கு இயக்கம் மேற்கொள்வது சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். அந்த வகையில் 5 ராசிக்காரர்கள் பயனடைய போகிறார்கள்.
ரிஷபம்
குரு புதனின் பின்னோக்கிய பயணத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள பதவி உயர்வு சாத்தியமாகும். வேலையில் இருந்து சிக்கல்கள் சரியாகவும். வணிகம், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும்.
கன்னி
இந்த ராசி க்காரர்களுக்கு புதன் மற்றும் குருவின் வக்கிர பார்வை நிதி ரீதியாக சாதகமாக அமையும். முதலீடுகள் நல்ல வருமானத்தை தரும். ஊடகம், கலை, ஃபேஷன் துறையில் உள்ளவர்கள் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் சரியாகும்.
விருச்சிகம்
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். ஆன்மிக ஈடுபாடு அதிகரித்து மன அமைதி கிடைக்கும்.
கும்பம்
குரு மற்றும் புதனின் பார்வையால் கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்பு உருவாகும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
இந்த ராசிக்காரர்களுக்கு தடைபட்ட வேலை முடியும். அதிர்ஷ்டம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கலாம். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
