உலகில் பலர் பலவிதமான தொழில்களை செய்கிறார்கள். யார் தங்களது தொழிலை வித்தியாசமான முறையில் அணுகுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள். அப்படி ஒரு பானி பூரி விற்கும் கடைக்காரர் தன்னுடைய வியாபாரத்தை பெருக்குவதற்கு புதிய யுக்தியை பயன்படுத்தியிருக்கிறார். அது என்னவென்று இனி காண்போம்.
வட மாநிலத்து உணவான பானி பூரி தற்போது தமிழகத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டது. எந்த ஒரு விசேஷம் என்றாலும் காதுகுத்து திருமணம் என எல்லா நிகழ்ச்சிகளிலும் இந்த பானிபூரி ஸ்டால் ஒன்றை அமைத்து விடுகிறார்கள். இளைஞர்களிடையே பானி பூரிக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்ட ஒரு கடைக்காரர் தனது வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்று புதுவித ஐடியாவை செய்து இருக்கிறார்.
நாக்பூரில் இருக்கும் ஒரு பானி பூரி கடைக்காரர் ஒரு வித்தியாசமான ஆஃபரை அறிவித்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் ஒருவர் இவரது பானி பூரி கடையில் ரூ 99,000 செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் அவர் காசே தராமல் எவ்வளவு பானி பூரி வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று ஆஃபரை வழங்கி இருக்கிறார்.
அவரின் இந்த வியாபார யுக்தி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதற்கு பலவித கமெண்ட்களும் வந்து கொண்டிருக்கிறது. அதில் இந்த தொகை பானி பூரிக்கான காசா? இவர் நியாயமாக இருப்பாரா இல்லை பணத்தை எடுத்துக் கொண்டு எங்கேயாவது சென்று விடுவாரா? ஒரு மனிதர் தன் வாழ்நாளில் ஒரு லட்சம் அளவு பானி பூரி சாப்பிடுவார்களா? என்று பலவித கேள்விகளை கேட்டு வருகிறார்கள். ஆனால் இப்படி இவ்வளவு பணத்தை கொண்டு பானிபூரி கடையில் போட்டு விட்டால் அதை சாப்பிட வேண்டும் நமக்கு தோன்றும். அதனால் நம் ஆரோக்கியம் இழந்து போய்விடும் இது நல்லதல்ல என்றும் அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…