தமிழ் சினிமாவில் வெறித்தனமான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஆசை, காதல் கோட்டை, வாலி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகரானார். அதன் பின்னர் தீனா படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய அவர் தொட்ரந்து மாஸ் மசாலா படங்களில் நடித்து வருகிறார்.
துணிவு படத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி கலைவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. இந்த படம் வழக்கமான அஜித்தின் மாஸ் மசாலா படம் போல இல்லாமல் இருப்பதால் அஜித்தின் அதி தீவிர ரசிகர்களுக்கு இந்த படம் கனெக்ட் ஆகவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த படத்தில் அஜித்துக்கு அறிமுகக் காட்சி இல்லை, மாஸான பில்ட் அப் ஷாட்கள் இல்லை, அதே போல பன்ச் வசனங்களும் இல்லை. இதெல்லாம் எதிர்பார்த்து வந்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் வசூல் பெரியளவில் குறைந்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
இந்த விமர்சனங்களுக்கு அஜித்தும் ஒரு காரணம். ஏனென்றால் தொடர்ந்து மாஸ் மசாலா படங்களாகவே நடித்து அதற்கேற்பவே தன்னுடைய ரசிகர்களை அவர் தயார் செய்துள்ளார். அதிலிருந்து அவர் அவ்வப்போது சில படங்கள் பண்ணி இருந்தாலும் அது அவருக்கு பெரிதாகக் கைகொடுக்கவில்லை.
அப்படி அவர் பண்ணிய முகவரி, கிரீடம், பில்லா 2, என்னை அறிந்தால், நேர்கொண்ட பார்வை மற்றும் தற்போது விடாமுயற்சி ஆகிய படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி பெரிய ஹிட் படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படங்கள் எல்லாம் முழுவதும் கமர்ஷியல் அம்சங்கள் அற்ற படங்கள் என்றும் சொல்லிவிட முடியாது. அதனால் இரண்டும் கெட்டான் படங்களாக வந்து யாருக்கும் திருப்தி அளிக்காத படங்களாக அமைந்துவிடுகின்றன.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…