பஞ்சாப் மாநிலம் மோகா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள், 83 வயதான முதியோரின் தங்கக் கம்மலை பறித்துச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அர்ஜுன் தேவ் நகரில் வசிக்கும் ஹர்ஜித் கவுர் என்ற அந்த முதியவர், தனது வீட்டின் வெளியே அமர்ந்திருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
விலாசம் கேட்பது போல பாசாங்கு செய்து அந்த முதியவரை அணுகிய அந்த மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் அவரது காதில் இருந்த கம்மலைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இந்தச் செயல்கள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/CNNnews18/status/2119253045561450592/video/1
பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்த காவல்துறை, இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு சந்தேக நபரைக் கைது செய்து அவரிடமிருந்து கம்மலையும் மீட்டுள்ளனர். மேலும், தப்பியோடிய மற்றொரு குற்றவாளியைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
