ஐயோ பாவம்… மனைவிக்கு தீபாவளி புடவையோடு திரும்பிய கணவர்… ஸ்கூட்டர் மீது மோதி 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தார் கார்… நெஞ்சைப் பதறவைக்கும் விபத்து…!!

By Swetha on கார்த்திகை 9, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு (நவம்பர் 7) ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. அப்பகுதியைச் சேர்ந்த 55 வயதான சந்தோஷ் சிங் சவுகான் என்பவர், தனது மனைவிக்காக தீபாவளிப் புடவை வாங்கிக் கொண்டு மின்சார ஸ்கூட்டரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரது வீட்டின் அருகே இன்னும் 500 மீட்டர்களே இருந்த தொலைவில், அதிவேகமாக வந்த ‘மகிந்திரா தார்’ எஸ்யூவி கார் ஒன்று அவரது ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

கார் ஓட்டப் பழகிக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் அந்த காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. காரின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், மோதிய வேகத்தில் ஸ்கூட்டருடன் அந்த நபரை சுமார் 20 முதல் 30 மீட்டர் தூரத்திற்கு கார் இழுத்துச் சென்றது. அதன் பிறகு கட்டுப்பாட்டை இழந்த அந்த சொகுசு கார், சாலையோரத்திலிருந்த வீடுகளின் எல்லைச் சுவர்களை இடித்துக்கொண்டு தோட்டத்திற்குள் புகுந்து நின்றது. இந்த கோர விபத்தின் காரணமாக சந்தோஷ் சிங் சவுகான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

விபத்து நடந்தவுடன் அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடியது. உடனே காரில் இருந்த இரு பெண்களும், அவர்களுடன் இருந்த ஒரு நபரும் காரை அங்கேயே கைவிட்டுவிட்டு, தங்களின் அழைப்பின் பேரில் அங்கு வந்த மற்றொரு காரில் ஏறி தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கான்பூர் காவல்துறை, விபத்தை ஏற்படுத்திய தார் காரைப் பறிமுதல் செய்துள்ளதுடன், தப்பியோடிய பெண்களைத் தேட அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறது.