Categories: சினிமா

அன்றிலிருந்து இன்று வரை.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பலரும் அறியாத தகவல்கள்..!!

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் திரைப்படத்தில் நடித்து திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படத்தை கைலாசம் பாலச்சந்தர் இயக்கினார். இதுவரை ரஜினிகாந்த் தமிழக அரசின் திரைப்பட விருதுகளை நான்கு முறை வென்றுள்ளார். முள்ளும் மலரும், மூன்று முகம், நல்லவனுக்கு நல்லவன், முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

கடைசியாக நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய வசூல் சாதனை குவித்தது. இப்போது ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்திலும் ரஜினிகாந்த் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் ரஜினிகாந்த் பற்றி பலரும் அறியாத தகவல்கள் உள்ளது. அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ரஜினிகாந்த் கடந்த 1950-ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தார். பிறப்பால் மராட்டியர் எனினும் ரஜினிகாந்துக்கு மராத்தி எழுத இப்படிக்கு தெரியாது. இதனையடுத்து ரஜினிகாந்துக்கு கன்னட மொழி மட்டுமே எழுத படிக்க தெரியும். அவர் தமிழில் நடிக்கும் போது ரஜினிகாந்த் கன்னடத்திலேயே கதை வசனம் எழுதி பின்பு அதனை புரிந்து கொண்டு நடிப்பார். ரஜினிகாந்த் தனது 50-வது படம் வரை ராகவேந்திராவின் தீவிர பக்தராக இருந்தார்.

அதன் பிறகு பாபா பக்தராக மாறினார். முதலில் ஆன்மீக அரசியலை எதிர்த்தவர் ரஜினிகாந்த். அதன் பிறகு ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்கிறார். சூப்பர் ஸ்டார் தனது அரசியல் வழிகாட்டியாக சோவை ஏற்று கொண்டார். ரஜினிகாந்த் தன்னை தீவிரமாக எதிர்த்த தமிழருவி மணியனை தனது கட்சிக்கு மேற்பார்வையாளராக நியமித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நீண்ட கால நண்பர் கமல்ஹாசன்.

ஆனால் எந்த காலத்திலும் ரஜினிகாந்த் கமலஹாசன் உடன் ஒத்துப் போகவே மாட்டார். ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதாக அறிவித்தார். ஆனால் அந்த முயற்சியை கைவிட்டு நிரந்தரமாக அரசியல் இருந்து விலகினார். ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அவர்கள் ரசிகர்கள் போராட்டம் வரை சென்றனர். ஆனால் எதுவுமே பலன் அளிக்கவில்லை. கடைசி வரை ரசிகர்களின் அரசியல் ஆசையை ரஜினிகாந்த் பூர்த்தி செய்யப்போவதில்லை.

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago